பதிவு செய்த நாள்
20
மார்
2021
06:03
நாமக்கல்: பங்குனி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல்லில் முருகன் கோவில்களில் சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. நாமக்கல்-மோகனூர் சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜை, தொடர்ந்து மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு அபி?ஷகம் நடந்தது. செவ்வரளி, மனோரஞ்சிதம், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார்.
* நாமக்கல்-துறையூர் சாலை, கூலிப்பட்டி கந்தகிரி பழனி ஆண்டவர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபி ?ஷகங்கள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு திருநீறு அலங்காரம் செய்யப்பட்டது.
* நாமக்கல்-கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவையால் அபி ?ஷகம் நடந்தது. பச்சை பட்டுடுத்தி ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.