வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2021 06:03
திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு 18ம் தேதி மாலை வாஸ்துசாந்தி பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10.30மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரவிழா துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதியுலா நடக்கிறது. 25ம் தேதி சுவாமி திருக்கல்யாணம், 27ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் தின்ஷா, தக்கார் லட்சுமிநாராயணன், உபயதாரர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் செய்கின்றனர்.