பதிவு செய்த நாள்
20
மார்
2021
06:03
ஈரோடு: ஆகம விதி மீறி நடை திறக்கப்பட்ட விவகாரத்தில், பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம், கடந்த, 15ல் மனுதாக்கல் செய்யும் முன், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், பூட்டிய நடையை திறக்க செய்து, தரிசனம் செய்தார். இந்த விவகாரம் சர்ச்சையாகி, பூசாரிகள் இருவருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் கூறியதாவது: கோவில் நடையை பூட்டியவுடன், பூசாரிகள் அலுவலகத்தில் சாவியை ஒப்படைத்து விட வேண்டும். நடையை திறக்கும் முன் சாவியை பெறக்கூடாது. தேர்தல் நடத்தை விதி இருக்கும் வரை, இந்த கோவிலில் மட்டும் இம்முறை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.