பதிவு செய்த நாள்
21
மார்
2021
12:03
பரமக்குடி : பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று காலைபங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலைபங்குனி பால்குட விழாகாப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்குமேல் கோயில் கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு அபிேஷகம் நிறைவடைந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.மாலை முத்தாலம்மன் பூதகி வாகனத்தில் வீதிவலம் வந்தார். அப்போதுகுழந்தைகள் பல்வேறு வேடமிட்டு வந்தனர்.தொடர்ந்து அம்மன் காலை, மாலை என, சிம்மம், கிளி, யானை, ரிஷப, குதிரைவாகனங்களில் வீதிவலம் வருவார். மார்ச் 23 அன்று வண்டிமாகாளி உற்ஸவத்தையொட்டி,காலையில் அம்மன் காளி அலங்காரத்திலும், மாலை வண்டிமாகாளி ஊர்வலம் நடக்கும். பின்னர் மார்ச் 28 அன்று காலை முதல் அக்னிச்சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு மின்சார தீப தேரில் அமர்ந்து, அம்மன் நான்கு மாடவீதிகளில் வலம் வருவார்.மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் கள்ளர் வேடத்தில் வைகைஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கும்.மார்ச் 30ல் காலை 5:00 மணி தொடங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவர். விழாவையொட்டி,கோயில் முன்பு உள்ள மேடையில் தினமும் கலைநிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர்செய்து வருகின்றனர்.