சிலருக்கு தனிமை தான் பிடிக்கும். யாரும் கூட இருந்தால் பிடிக்காது. இப்படி நீண்டகாலமாக இருளில் கிடப்பவன், வெளிச்சத்துக்கு வந்தால் அவனுக்கு கண்கள் கூசும். இப்படிப்பட்ட மனிதர்கள் நன்மைக்கான வழி எது என்பதை அறியாத மூடர்கள். சிலர் வெளிச்சத்தில் தான் இருப்பார்கள். நல்லது, கெட்டது எல்லாம் அவர்களின் கண்களுக்கு தெரியும். ஆனாலும் குறுக்கு வழியில் முன்னேற விரும்பி நல்லதை காற்றில் பறக்க விடுவர். இவர்கள் பார்வை இருந்தும் இருளில் கிடப்பவர்கள். நல்லதை கைவிட்ட இந்த இரு தரப்பினரும் நரகமாகிய இருளை அடைவர். ‘‘வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்’’ என்கிறது பைபிள். பாவ இருளை விலக்கி நல்வழியில் நடக்க இன்றே உறுதி எடுப்போம்.