குடும்பத்தலைவர் ஒருவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது குடித்து விட்டே வருவார். சம்பளத்தை வீட்டுக்குத் தராத அவர் ஒருநாள்,‘‘ எப்போதும் ஒரே விதமான சாப்பாடு தான் வீட்டில் இருக்கு. அசைவமே தயாரிப்பதில்லை’’ என மனைவியை அடித்தார். அவள் என்ன செய்வாள் பாவம்? அவளது சகோதரர் கொடுத்த பணத்தில் கஞ்சி மட்டுமே வைக்க முடிந்தது. ஊறுகாய்கூட அண்டை வீட்டினர் இரக்கப்பட்டு கொடுத்தது. தந்தையை திருத்த பிள்ளைகள் முடிவுக்கு வந்தனர். ‘‘அப்பா! நாளை முதல் இரவு சாப்பாடு ஆட்டுக்கறியும், மீனும் தருகிறோம். எங்களுக்கு ஒரு பொருள் வாங்கித் தர வேண்டும்?’’ எனக் கேட்டனர். ‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ என்றான். ‘‘ஆளுக்கு ஒரு சட்டி வாங்கிக் கொடு. பிச்சை எடுத்து உனக்கு உணவு தருகிறோம்’’ என்றனர். மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். ‘‘குடிப்பழக்கம், அளவுக்கதிகமாக மாமிசம் சாப்பிடுபவனிடம் நட்பு வைக்காதே’’.