சப்தமாதர்களில் ஒன்றான இவள், சிவபெருமானின் பெண் அம்சமாக திகழ்கிறாள். காளி என்றும் பெயருண்டு. எட்டு கைகளில் சூலம், வாள், அம்பு, சங்கு, சக்கரம், பாசம், பலகை, வில் ஏந்தியிருப்பாள். எருமை வாகனத்தில் அமர்ந்திருப்பாள். நரம்புத்தளர்ச்சி தீரவும், கை, கால் நடுக்கம் நீங்கவும் வழிபடுவர். இவளது வழிபாட்டை உதாசீனப்படுத்தினால் ஊருக்குள் கலவரம் வரும். ஊரின் வடக்கு எல்லையில் கோயில் கொண்டிருப்பாள். இதனால் வடக்கு வாசல் செல்வி என்றும் அழைப்பர். வெள்ளிக்கிழமைகளில் கூழ், தயிர்சாதம், பால், சர்க்கரை சேர்த்த அவல் நைவேத்யம் செய்ய மனம் குளிர்வாள்.