பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ரம், வைகானஸம் என்னும் ஆகமங்களின்படி பூஜை நடக்கும். ஆனால் காஞ்சிபுரம் நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயிலில் சிவாகம முறைப்படி பூஜை நடக்கிறது. இக்கோயில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இருப்பதால் சிவாச்சாரியார்களே பூஜை செய்கின்றனர். பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி இங்கு நாபியில் (தொப்புள்) இருந்து அருள்பாலிக்கிறாள். எனவே தனியாக தாயார் சன்னதி இங்கு கிடையாது. உருவமின்றி இருப்பதால் ‘நேர் உருவில்லா தாய்’ என இக்கோயிலில் தாயாரை சொல்கின்றனர்.