100ம் ஆண்டு பங்குனி விழா: சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2021 09:03
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 100 வது ஆண்டு பங்குனி திருவிழா இன்று துவங்குகிறது.ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வடமதுரை பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்று நுாற்றுக்கணக்கான திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதே பங்குனி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.100வது ஆண்டு திருவிழாவிற்காக இன்று காலை 10:00 மணியளவில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு இரவு முள்ளிப்பாடியில் தங்குகிறார். நாளை (மார்ச் 28) காலையில் முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளிப்பார். அன்று மாலை துவங்கி ஏப்.3 இரவு வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்.4ல் வடமதுரை கோயில் சன்னதிக்கு பெருமாள் திரும்புவார். ஏற்பாட்டினை கோயில் செயல்அலுவலர் மாலதி, தக்கார் மகேஸ்வரி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.