மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஏப். 27 ல் சித்ரா பவுர்ணமி விழா: சீரமைக்க கலெக்டரிடம் மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2021 05:03
கூடலுார்: தமிழக - கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா ஏப். 27ல் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலை சீரமைக்கக்கோரி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் தேனி கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் மனு கொடுத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தமிழக --கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் விழா கொண்டாடப்படும். இரு மாநில பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி அதில் எடுக்கும் முடிவுகளின்படி விழா கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழா நடைபெறவில்லை.இந்நிலையில் இந்தாண்டு விழாவிற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தவும், கடந்த ஆண்டு சீரமைக்காததால் புதர்கள் சூழ்ந்துள்ள கோயிலை சீரமைக்கவும், சுற்றுலாத்துறை மூலம் நிதி ஒதுக்கி இந்தாண்டு சிறப்பாக விழா நடத்தவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் ஆகியோர் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.