சிதிலமடைந்த அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர் சிலை கண்டெடுப்பு.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 02:01
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர் உலோக சிலை கண்டெடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் மேலத் தெருவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலில் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. இக்கோவிலின் முன்புறம் உள்ள விநாயகர் சிலை கீழே உள்ள பீடத்தை சரி செய்யும் பணி நேற்று நடந்துள்ளது. அப்போது விநாயகர் சிலை அருகே மண் எடுத்த போது 1 அடி உயரம் உள்ள உலோகத்தால் ஆன சைவ சமய குறவர்கள் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவிளையாட்டம் விஷம். பார்த்திபன் விரைந்து சென்று விக்கிரகத்தை கைப்பற்றி தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார். முன்னதாக அப்பகுதி மக்கள் கண்டெடுக்கப்பட்ட சிலையை பார்வையிட்டு அது எந்த காலத்தை சேர்ந்தது. என்ன உலோகத்தால் செய்யப்பட்டது. இங்கு எப்படி வந்தது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வலியுறுத்தினர். இது குறித்து வருவாய் துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.