தை சோமவார பூஜை; அமிர்தகடேஸ்வரர், பார்வதி தேவிக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 02:01
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள அமிர்தகடேஸ்வரர் மற்றும் பார்வதி தேவிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.