திருப்பதி நாராயணகிரி தோட்டத்தில் இசை நிகழ்ச்சி: ஊஞ்சல் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 02:01
திருப்பதி : திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில், ஸ்ரீ புரந்தர தாசரின் பக்திப் பாடல்கள் பக்தர்களை கவர்ந்தது. ஸ்ரீ புரந்தர தாசர் ஆராதனை மகோற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. முன்னதாக, சுவாமி தனது தேவியருடன் நாராயணகிரி தோட்டங்களுக்கு எழுந்தருளினார். இந்தச் சந்தர்ப்பத்தில், மாலையில் நடைபெற்ற ஊஞ்சல் சேவையின் போது இசைக்கப்பட்ட பக்திப் பாடல்கள் பக்தர்களைப் பரவசப்படுத்தின. தேவஸ்தான தாச சாகித்ய திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் அனைவரும் இணைந்து புரந்தர தாசரின் பாடல்களைப் பாடினர். தேவஸ்தான தாச சாகித்ய திட்ட சிறப்பு அதிகாரி ஆனந்ததீர்த்தாச்சார்யுலு, ஸ்ரீவாரி கோயில் துணை செயல் அதிகாரி லோகநாதம், பிற அதிகாரிகள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பஜனை மண்டலி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.