ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் விளக்குகள் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 02:01
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் உறவுகள் மற்றும் உலக நன்மை வேண்டி கணு நீராட்டு உற்சவம் நடந்தது. உற்சவமூர்த்தி யக்ஞவராகன், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உற்சவர் யக்ஞவராக பெருமாள் ஆண்டாள் நாச்சியாருடன் கிளி, மாலையோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் உற்சவத்தையொட்டி கோவில் முன்புறம் உள்ள மண்டபம் மற்றும் கோவில் உள்பிராக பகுதிகளில், 4 ஆயிரம் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.