மொடக்குறிச்சி: கரியகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மொடக்குறிச்சி கரியகாளியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று நடந்தது. முன்னதாக கடந்த, 16ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. இதையடுத்து கம்பம் நடுதல், பூச்சொரிதல், கிராம சாந்தி, கொடியேற்றம், காவிரியில் தீர்த்தம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கரியகாளியம்மனுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து மாலையில் தேரோட்டம் மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று சிறப்பு பூஜை, மஞ்சள் நீராட்டுடன், தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.