பதிவு செய்த நாள்
28
மார்
2021
10:03
நகரி : காளஹஸ்தி கோவிலில், 21 நாட்களில், 1.01 கோடி ரூபாய், பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
சித்துார் மாவட்டம், காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதலை ரொக்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளாக உண்டியலில் செலுத்துகின்றனர்.அந்த வகையில், கோவிலில் மஹா சிவராத்திரியையொட்டி, ஆண்டு பிரம்மோற்சவம் நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, உண்டியலில் காணிக்கை செலுத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம், கோவில் அதிகாரி பெத்திராஜூ முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.இதில், கடந்த, 21 நாட்களில், ௧ கோடியே, ௧ லட்சத்து, 23 ஆயிரத்து, 579 ரூபாய் ரொக்கம், 82 கிராம் தங்கம், 383 கிலோ வெள்ளி, 39 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.