Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்ம பெருமாள் கோவிலில் தெப்ப ... சிவகிரிபட்டி அக்னி வீரபுத்திரன், பேச்சியம்மன், கோட்டை கருப்புசாமி கோயிலில் கும்பாபிஷேகம் சிவகிரிபட்டி அக்னி வீரபுத்திரன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

02 மார்
2026
01:03

திண்டுக்கல்: மாசி மாத பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4:00மணிக்கு நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.


ஆர்.எம்.காலனி வி.ஐ.பி., நகர் சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், பழநி ரோடு பத்ரகாளியம்மன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டாஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபராதனை நடந்தது. நாகல்நகர் பாரதிபுரம் சாய்பாபா கோயிலில் விபூதி அபிேஷகம், பால் அபிேஷகம், அன்னதானம் நடந்தது.


வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன், எரியோடு சாய்பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.


பழநி: பழநி முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பாதவிநாயகர் கோயில் அருகே உள்ள மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலைநாயகி அம்மன் கோயில், கலையம்புத்தூர் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில், ராமநாதநகர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.


நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது.


மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar