சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமையான தேவநாத பெருமாள் மற்றும் யோக ஹயக்ரீவர் கோவில் உள்ளது.
இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதும் மாணவ -– மாணவியர் நல்ல மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற வேண்டி, யோக ஹயக்ரீவர் வித்யா அபிவிருத்தி சங்கல்ப அர்ச்சனை மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெறும்.
இன்று பிளஸ் 2 மாணவ- – மாணவியருக்கு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக மாணவ -– மாணவியர் மற்றும் பெற்றோர் கோவிலுக்கு அதிகளவில் வந்தனர்.
ஆண்டுதோறும் கோவிலின் முகப்பு பகுதியில் நிழற்பந்தல் மற்றும் கட்டைகள் கொண்டு வரிசை அமைத்து பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நடக்கும்.
இந்த ஆண்டு முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.