பதிவு செய்த நாள்
29
மார்
2021
05:03
சேலம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சேலம், குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை சிறப்பு அபி ?ஷகம், பூஜை நடந்தது. அம்மாபேட்டை, வையாபுரி முதலி தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார தெருக்களில் இருந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். சேலம், ஊத்துமலை முருகன் கோவிலில், பாலசுப்ரமணியர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரமனூர் கந்தசாமி கோவிலில், சிறப்பு அபி?ஷகத்தை தொடர்ந்து, வள்ளி, முருகன் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்காடு, அடிவாரம், அறுபடை முருகன், பேர்லேண்ட்ஸ் முருகன், செவ்வாய்ப்பேட்டை சித்திரைச்சாவடி முருகன், அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர், ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழநியாண்டவர் ஆசிரமம், கந்தாஸ்ரமம் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சிறப்பு அபி?ஷகம், பூஜையில் திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு மூலவர் கந்தசாமிக்கு, 16 வகை மங்கல பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டு, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமி, பல வண்ண மலர்கள், தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு, மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்த சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.