மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தெப்பல் உற்சவ திருவிழா நடந்தது. கடந்த 19ம் தேதி பங்குனி உத்திர பெரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு மலை யடிவாரத்தில் உள்ள அக்னி குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணியர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு மகா தீபாராதனை, வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.