பாக்.,கில் 100 ஆண்டு ஹிந்து கோயிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2021 05:03
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஹிந்து கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கதவுகள் படிக்கட்டுகளை சேதப்படுத்தி உள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது.கைபர் -பக்துன்க்வா மாகாணத்தின் காரக் மாவட்டத்தில் உள்ள கோயிலை கடந்தாண்டு இறுதியில் ஒரு கும்பல் சேதப்படுத்தியது.இந்நிலையில் ராவல்பிண்டி நகரின் புராண கிலா பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஹிந்து கோயிலின் புனரமைப்பு பணிகள் கடந்த வாரம் துவங்கின.
இதற்கு முன்பாக கோயிலுக்கு முன் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் இரவு நேரத்தில் கோயிலுக்குள் புகுந்து படிக்கட்டிகள் கதவுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர்.தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடுவதுடன் கோயிலுக்கு பாதுகாப்பும் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது கோயில் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக கருதுகிறோம்.கோயிலில் இருந்த சிலைகள் வழிபாட்டு சாதனங்களை அவர்கள் சேதப்படுத்தவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.