புதுச்சேரி; சின்ன சுப்ராயப் பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் பள்ளயம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி சின்ன சுப்ராயப் பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 44ம் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 12ம் தேதி துவங்கியது. பாவாடைராய சுவாமிக்கு பள்ளயம் உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் செய்திருந்தனர்.