சோமனூர்: சோமனூர் மாகாளியம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சோமனூரில் உள்ள செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், சுப்பிரமணியர் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 23 ம்தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. 29 ம்தேதி விநாயகர் பொங்கலும், நேற்று முன்தினம் கம்பம் நடுவிழாவும் நடந்தது. நேற்று அதிகாலை, அம்மை அழைத்தல், ஆபரணம் எடுத்தல் மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, பூவோடு எடுத்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு மற்றும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.