பதிவு செய்த நாள்
01
ஏப்
2021
06:04
செஞ்சி; செஞ்சி கோதண்டராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. செஞ்சி, சங்கராபரணி ஆற்றங்கரையில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த 1714ம் ஆண்டு ஆற்காட்டு நவாப் செஞ்சி மீது படையெடுத்தபோது பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி சின்னாபின்னமானது. பிறகு 300 ஆண்டுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு கோதண்டராமர் ஆலய அறக்கட்டளை துவங்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன. இதில் மூலவர் சன்னதி புதுப்பித்து, இதன் முன்பு புதிதாக மகா மண்டபம் கட்டி உள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நாளை (2ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி நேற்று மாலை விசேஷ ஆராதனை, சங்கல்பம், யாகசாலை பிரவேசம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹணம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.இன்று (1ம் தேதி) காலை 7.30 மணிக்கு புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், அக்னி பிரணியம், விசேஷ ஹோமம் ஆகியனவும், 8:00 மணிக்கு பிம்பம், விமான கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும், 11 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாஹூதியும் நடக்கிறது.மாலை 3:00 மணிக்கு பிம்பவாஸ்து, கண்திறத்தலும், இரவு 9:00 மணிக்கு மூன்றாம் கால ஹோமமும் நடக்கிறது.நாளை (2ம் தேதி) காலை 8:00 மணிக்கு விஸ்வரூபம், விசேஷ ஹோமமும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:00 மணிக்கு கலச புறப்பாடும், 9.30 மணிக்கு விமான சம்ப்ரோஷணமும், மூலவர், அனுமன் சன்னதியில் மகா தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உற்சவர் திருக்கல்யாணமும் நடக்கிறது.