‘‘இறைவா! அவன் மகாபாவி... அவனுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறாய். நான் நல்லவன், யோக்கியன், ஒரு பாவமும் அறியாதவன். எனக்கு ஏன் அவனைப் போல செல்வத்தைக் கொடுக்கவில்லை?’’ என மனதிற்குள் சிந்திக்காதீர்கள். மனிதன் பிறக்கும் போதே அவனுக்கான விதி எழுதப்பட்டு விட்டது. அதன்படியே எல்லாம் நடக்கும். உங்களுக்கு இறைவன் எதைக் கொடுத்துள்ளானோ அதைக் கொண்டு வாழுங்கள் .‘‘உங்களை விட கீழ் நிலையில் உள்ளவர்களைப் பாருங்கள். மேல் நிலையில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அவ்வாறு செய்தால் உங்களுக்கு அருளப்பட்ட அருட்கொடையை தாழ்மையாக கருதுவதாகும்’’ இறைவன் நமக்கு கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். ‘‘அவன் ஒரே நாளில் பணக்காரனாகி விட்டானே. அவனுக்கு கிடைத்தது எனக்கு கிடைத்திருக்கக் கூடாதா?’’ என ஏங்காதீர்கள். இப்படிப்பட்டவர்களை இறைவன் புறக்கணிப்பான்.