காலை 9:00 மணி வரை சாப்பிடாமல் இருக்கும் ஒரு மனிதரை பத்து மணிக்கு சந்திக்க நேர்ந்தால் அவரது முகத்தில் சோர்வு தெரியும். பத்து மணி வரை என்ன... மதியம் வரை சாப்பிடாமல் இருப்பவரது முகம் கூட தெளிவாக இருக்கும். யாருக்குத் தெரியுமா... அதிகாலையில் எழுந்து பரிசுத்தத்தை மனதில் நிரப்பியவருக்கும், ஞானத்தை உள்ளத்தில் ஏற்றியவருக்கும்! ‘ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தால் அவரது முகம் பிரகாசமாக இருந்தது’ என பைபிள் குறிப்பிடுகிறது. முகத்தின் அழகை விட மனதின் அழகே பயனுள்ளது என்றும் சொல்கிறது. இன்று பலர் என்ன செய்கிறார்கள்? முகம் பிரகாசமாக இருக்க பவுடர் பூசுகிறார்கள். கிரீம் தடவுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெரிய மூக்கை சிறிதாக்குகிறார்கள். இவையெல்லாம் அழகை தருவதாக நம்புகிறார்கள். இதற்கு பதிலாக மனதை திருத்துங்கள். மன அழுக்கைப் போக்கும் நல்ல பழக்கங்களை இன்று முதல் மேற்கொள்ளுங்கள். ஆனந்தம் ஆரம்பமாகும்.