கெட்டவனைக் கணவராக அடையும் பெண்களும், கெட்டவளை மனைவியாக அடையும் ஆண்களும் படும் வேதனை கொஞ்சமல்ல. படித்தவர், படிக்காதவர் என இருதரப்பிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் மனைவி அல்லது கணவரைக் கொடுமைப்படுத்தி சந்தோஷப்படுகிறார்கள். ‘இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, ஆண்டவர் சும்மா இருக்கிறாரே’ என பாதிக்கப்பட்டோர் வேதனைப்படுவர். சாத்தானின் ஆசை வார்த்தைகளில் மயங்கி விஷக்கனியை சாப்பிட்டாள் ஏவாள். அவளோடு சேர்ந்த ஆதாமும் பாவத்திற்கு ஆளானான். வாழ்க்கைத்துணை செய்த தவறுக்கு அவனும் துணை போக நேர்ந்தது. இதுபோல குடும்பத்தில் கணவன் கெட்டவனாக இருந்தால், மனைவி அவனிடம் அடி வாங்கி துன்பப்படுகிறாள். அதாவது கணவனை பிடித்த சாத்தான் அப்பாவியான மனைவியையும் சேர்த்து தாக்குகிறான். பாதிக்கப்பட்டோர் பயத்தை கைவிட வேண்டும். ஆண்டவரைச் சரணடைந்தால் தீர்வு கிடைக்கும்.