நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2021 02:04
பாலக்காடு: நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாராவில் உள்ளது புகழ்பெற்ற நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் நடந்தன. இவ்விழாவை எல்லா ஆண்டும் நெம்மாரா மற்றும் வல்லங்கி உற்சவ குழு நிர்வாகத்தினர் போட்டி போட்டு நடத்தி வந்தன. கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் ஊர்டங்கினால் விழாவை சடங்குகள் மட்டுமாக நடத்தினர். இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வினால் சிறப்பாக நடந்தன. நேற்று அதிகாலை அம்மன் சன்னிதி திறப்புடன் விழா ஆரம்பமாயின. தொடர்ந்து கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், பஞ்சவாத்தியம் முழங்க யானைகளின் அணிவகுப்பு ஆகியவை நடந்தன. திருவிழாவின் முக்கிய அம்சமான வானவேடிக்கை நேற்று மாலை 7 மணியளவிலும் இன்று அதிகாலை 4 மணியளவிலும் நடந்தன. ஆயிரக்கணக்கானோர் இந்த வான வேடிக்கையை கண்டு மகிழ்ந்தன.