பதிவு செய்த நாள்
08
ஏப்
2021
04:04
குளித்தலை: குளித்தலை, குந்தாளம்மன் கோவில் கோவில் திருவிழா கடந்த மார்ச், 31ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 4ல் பூச்சொரிதல் விழாவும் நேற்று காலை பக்தர்கள், காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். இரவு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை இளநீர் பூஜை, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி, 8ல், மாலையில் அனைத்து கிராமத்தின் சார்பில் கிராம பூஜை, 9ல் மாலை மாவிளக்கு பூஜை, 10ல் சாமி குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குளித்தலை சுற்றுப்பகுதி கிராம மக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.