காத்மாண்டு கைலாச யாத்திரை மேற்கொண்டுள்ள இந்தியர்கள், நேபாளத்தில் தட்டோபானி என்ற எல்லைப் பகுதி வழியாக திபெத் செல்ல வேண்டும். யாத்ரீகர்களின் வாகனங்கள், இந்த எல்லைப் பகுதியைக் கடக்க உரிய உரிமம் பெறாத காரணத்தால், சீன அதிகாரிகள் இந்த வாகனங்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். சீன அதிகாரிகள் அனுமதி கிடைக்கும் என்று நம்பி, 800 யாத்ரீகர்கள் தட்டோபானி பகுதியில் காத்திருக்கின்றனர். நேபாள குடியேற்ற அதிகாரி சுதிர் ஷா, இதுகுறித்து குறிப்பிடுகையில், "யாத்ரீகர்கள் சீன எல்லைக்குள் செல்ல சீன நாட்டு தூதரகத்தையும், இந்திய தூதரகத்தையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். நேபாளத்தில் இந்திய யாத்ரீகர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிப்பதில்லை. தலாய் லாமா ஆதரவாளர்கள் யாத்ரீகர் வேடத்தில் நுழைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சீன அதிக கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என்றார்.