இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி கடைசி வெள்ளி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2021 11:04
சாத்துார்: இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் கடைசி வெள்ளித்திருவிழா இன்று நடைபெற்றது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் கடைசி வெள்ளித் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் இருக்கக் குடி, நத்தத்துபட்டி, நென்மேனி, கே. மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுக் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவர். மேலும் அம்மனுக்கு, பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம். பூஜைகள் நடக்கும். திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனைவரும் கைகளை அடிக்கடி சோப்பு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.