பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெறுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2021 10:04
மானாமதுரை : மானாமதுரையின் எல்லை தெய்வமான பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் தமிழக அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால் திருவிழா நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதால் பக்தர்கள் வேதனைக்குள்ளாகினர்.
மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா துவங்குவதற்கு முன்னதாக ஊரின் எல்லை தெய்வமான பிடாரி அம்மனுக்கு திருவிழா நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழாவின் துவக்கமாக நேற்று முன்தினம் இரவு கோயிலில் அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து 9 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு பூஜை வரும் 13 ம் தேதி நடக்க இருந்த நிலையில், அரசு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.,10 முதல் தடை விதித்துள்ளது. இதனால், திருவிழா நடக்குமா என்ற கேள்வி பக்தர்களிடம் எழுந்துள்ளது.