பழநி: பழநியில் மலைக்கோயிலில் கடந்த பிப்.10ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. அதன்பின் சமீபத்தில் தீர்த்தக் காவடிக்கு புகழ்பெற்ற பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. 57 நாட்களுக்கு பிறகு நேற்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 1172 கிராம் தங்கமும் 23,645 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 148 காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் செயல் அலுவலர் கிராந்தி குமார் பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை கூடலழகர் கோயில் உதவி ஆணையர் ராமசாமி, அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி உட்பட கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது.