அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கீழச்சின்னணம்பட்டி கருப்புசாமி, அய்யனார், முத்தாலம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது.ஏப்.,7 கருப்புசாமி கண் திறந்து,சிறப்பு அலங்காரத்திற்கு பின் சன்னதி அடைந்தார். பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, அக்னி சட்டி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நேர்த்திகடன் செலுத்தினர். கனி மாற்றுதல், மழை வேண்டியும், சாத்தையாறு அணைக்கு வைகை பெரியாறு பாசனநீர் கிடைக்க சிறப்பு பூஜை செய்தனர்.ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.