பல்லடம்: பல்லடம் - பொள்ளாச்சி ரோடு, வெங்கிட்டாபுரம் அருகே அமைந்துள்ள அண்ணமார் கோவிலில், பொங்கல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, தீர்த்த காவடி எடுக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் அண்ணமார் கோவிலிலிருந்து நாகாத்தம்மன் கோவிலுக்கு தீர்த்த காவடி எடுத்து சென்றனர். அங்கு அம்மனுக்கு தீர்த்த அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன. முன்னதாக, நாகாத்தம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் அண்ணமார் சுவாமி, மற்றும் நாகாத்தம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.