பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
04:04
சிந்தாதிரிப்பேட்டை- திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில், 16ம் தேதி, சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது.சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள, திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில், இந்தாண்டு சித்திரை திருவிழா, வரும், 16ம் தேதி துவங்கி மே, 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின், 4ம் நாள் அதிகார நந்தி வாகனத்திலும், 6ம் நாள் ரிஷப வாகனத்திலும், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.விழாவின், 8ம் நாள் ரத உற்சவம் நடைபெறுகிறது. உற்சவத்திற்கான, அனைத்து வகையான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, முககவசம் அணியாமல் வருவோருக்கு, கோவிலில் அனுமதி கிடையாது என்றும் உரிய பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படு வர் என்றும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.