திருவெற்றியூர் கோயில் திருவிழா; அழைப்பிதழ் கொடுப்பது நிறுத்திவைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2021 04:04
திருவாடானை : கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலால் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் திருவிழா அழைப்பிதழ்கொடுப்பது நிறுத்திவைக்கப்பட்டது.
திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ல் கொடியேற்றமும், 25 ல் தேரோட்டமும், 26 ல் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுவதாக தேவஸ்தானம் சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கபட்டது.ஆனால் தமிழகத்தில்கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற அச்சத்தில் அழைப்பிதழ் கொடுப்பது நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
இது குறித்து தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது: திருவிழா அழைப்பிதழ் தயாராகிவிட்டது. ஆனால் பக்தர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பது நிறுத்திவைக்கபட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து திருவிழா நடத்துவதற்கான உத்தரவு வந்தால் மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்படும், என்றனர்.பக்தர்கள் கூறியதாவது:கடந்தாண்டும் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டாவதுதிருவிழா நடைபெற வேண்டும் என எதிர்பார்த்துள்ளோம், என்றனர்.