400 ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2021 04:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் பாம்ப லூரணி நீரோடையில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்சிற்பத்தில் உள்ள வீரன் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது அமர்ந்து ஈட்டியை கையில் ஏந்தியவாறு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தது போல் உள்ளது. கூந்தலை அள்ளி முடிந்து தலைக்கு மேலே கொண்டையாகவும், இரு புஜங்களில் தோல் வளையமும், கைகளில் காப்பு, கழுத்தில் சிறிய மாலையும் முழங்கால் வரை அணிந்தவாறு சூரிய உதயத்தை எதிர்நோக்கும் வகையில் கிழக்கே அமைந்துள்ளது. அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது அமர்ந்து இருப்பதால், போரில் வீரமரணமடைந்த வீரனாக இருக்கலாம் என அறிய முடிகிறது. இந்த நடுகல் தற்போது சிவராத்திரியன்று மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். என்று அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் விஜயராகவன் கூறினார்.