பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
07:04
காஞ்சிபுரம்; கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், கோவில் திருவிழாக்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது. இதனால், கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், சித்திரை திருவிழா வரும், 20ம் தேதி துவங்குவதாக இருந்தது. உபயதாரர்கள், அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கோவில் திருவிழாக்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடக்குமா என, கேள்வி எழுந்துள்ளது. முறையான அறிவிப்பு, அறநிலையத் துறையிடம் இருந்து வந்த பின்தான், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே, கச்சபேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று காலை எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா முன்னிலையில், செயல் அலுவலர் பூவழகி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், 5.57 லட்சம் ரூபாய், 21 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி, வருவாயாக கிடைத்தது.