ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2021 12:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வெகு சிறப்புடன் நடந்தது.
இக்கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் 13 நாட்கள் பூக்குழி திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தல் எனும் பூக்குழி இறங்குவார்கள். வழக்கம்போல் இந்த வருடமும் கடந்த மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. அமாவாசை தினமான இன்று நடக்கவேண்டிய பூக்குழி திருவிழா, கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக நேற்று அதிகாலை 3 மணிக்கு துவங்கி 6 மணி வரை பூக்குழி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள், குழந்தைகள் பூக்குழி இறங்கினர். ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்கு எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் கலாராணி செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. நமச்சிவாயம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை நடக்க வேண்டிய தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.