திருப்பதி: கொரோனா பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசனம், நாளை முதல், ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, நாளை முதல், இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்காக, திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் அளிக்கப்படுவது திங்கள் முதல் நிறுத்தப்படுகிறது. விரைவு தரிசன டிக்கெட் உள்ளிட்ட ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.திருமலைக்கு வரும் பக்தர்கள் தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.