தேவகோட்டை: தேவகோட்டையில் கட்ட முருகப்பன் தெருவில் காசி பாதயாத்திரை தலைவர் கவிஞர் அருசோ ராமாயண ராமர் கோயில் கட்டி வருகிறார். இக்கோயிலில் திருமுருக பூண்டி சிற்ப கலைக் கூடத்தில் இருந்து ஸ்ரீராமர் , சீதை, லட்சுமணர், பரதன் சத்துருகனன், ஆஞ்சநேயர் கம்பர் வான்மீகி ஆகியோரின் விக்ரகங்கள் நேற்று முன்தினம் தேவகோட்டை புதிய கோவிலுக்கு வந்து அடைந்தன விக்ரகங்களுக்கு பக்தர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விக்கிரகங்களுக்கு பல்வேறு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டு விக்கிரகங்கள் ஜலவாசத்தில் வைக்கப்பட்டன. முன்னதாக காலை 8 மணி முதல் மதியம் வரை கவிஞர் அருசோமசுந்தரன் தலைமையில் கம்பராமாயணம் முற்றோதல் நடந்தது. நிகழ்ச்சிகளுக்கு சிற்பி சண்முகநாதன் தலைமை வகித்தார். சிதம்பரம் தலைமையில் பேராசிரியர் சுப்பையா, ஞாலம் பவுலர் அண்ணாமலை, ராசகோபால், கண்ணா, சுப்பிரமணியன், அழகப்பன் , குமரப்பன், வாழ்த்துரை வழங்கினர், வள்ளியப்பன் புத்தகங்கள் வழங்கினார்.