ஊட்டி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தேர்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நடப்பாண்டு விழா, கடந்த, மார்ச், 19 ம் தேதி துவங்கியது. ஏப்., 24 ம் தேதி முடிவடைகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 20 ம் தேதி தேர் திருவிழா நடப்பதாக இருந்தது. ‘கொரோனா’ பரவல் காரணமாக தேர் திருவிழாவை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. செயல் அலுவலர் முத்துராமன் கூறுகையில், ‘‘ ‘கொரோனா’ தடுப்பு நடவடிக்கையாக, ஏப்., 20 ம் தேதி நடக்க இருந்த தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோவில் பணியாளர்கள் பூஜை செய்து முடித்து கொள்கின்றனர்.’’ என்றார்.