அன்னூர்: அன்னூர், ஐயப்பன் கோவிலில், இன்று மூலிகை சூரணம் வழங்கப்படுகிறது. அன்னூரில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும், அமாவாசை நாளன்று, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாட்டின் போது, பக்தர்களுக்கு, பல்வேறு அரிய மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சூரணம் வழங்கப்படுகிறது. இந்த சூரணத்தை அருந்துவதன் மூலம், பல்வேறு உடல் நலக் குறைவுகள் தீரும் என, ஐயப்ப சேவா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.