பதிவு செய்த நாள்
11
ஏப்
2021
10:04
போத்தனூர்: குறிச்சி காந்திஜி ரோட்டில் பழமையான குண்டத்து மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்புடன், கன்னிமூல கணபதி, சப்தகன்னிமார், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் கருப்பண்ணசாமி சன்னதிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கும்பாபிஷேக விழா வரும், 16 காலை, 7:00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர் பூஜை, பஞ்சகவ்ய பூஜை, புன்யாக வாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவைகளுடன் துவங்கிறது.
மாலை, 5:00 மணிக்கு வாஸ்துசாந்தி. பூத சுத்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜையும் தொடர்ந்து, மகா தீபாராதனை, பிரசாதம் விநியோகம் ஆகியவையும் நடக்கின்றன. இரண்டாம் நாளான, 17 காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூத சுத்தி, விமான கலச ஸ்தாபிதம், பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் விநியோகமும், 11:30க்கு இரண்டாம் கால பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதலும் நடக்கின்றன. மாலை, 5:30 க்கு மூன்றாம் கால யாக பூஜை, எந்திர ஸ்தாபனம். அஷ்டபந்தனம் சாத்துதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், இரவு, 7:00க்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் தொடர்ந்து திரவியம், பூர்ண ஆர்த்தியும் நடக்கின்றன.
நிறைவு நாளான, 18 அதிகாலை, 5:30 க்கு, நான்காம் கால யாக சாலை பூஜை துவக்கம், பிம்ப சுத்தி, நாடி சப்தானம், யாத்ரா தானமும், காலை, 8:15 மணிக்கு விமானம் மற்றும் மூல ஆலய கும்பாபிஷேகமும் நடக்கின்றன. காலை, 9:00 க்கு, மகா அபிஷேக அலங்காரம். தச தரிசனம், கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும் தொடர்ந்து அன்னதானமும் நடக்கின்றன. ஏற்பாடுகளை, குறிச்சி அனைத்து சமூக பெரிய தனக்காரர்கள் செய்துள்ளனர்.