பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
05:04
மேட்டூர்: மாதேஸ்வரன் கோவில் பெரிய தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், வெளியூர் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அடுத்த, கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலையில், ஆண்டுதோறும் ஏப்ரலில், யுகாதி பண்டிகை சிறப்பாக நடக்கும். தமிழகம், கர்நாடகா பக்தர்கள் பங்கேற்பர். நடப்பாண்டு, யுகாதி பண்டிகை, நேற்று தொடங்கி, வரும், 13 வரை நடக்கிறது. இறுதி கட்டமாக, 13ல் பெரிய தேரோட்டம் நடக்கும். ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் வைத்து தேர் இழுப்பர். ஆனால், தற்போது கொரோனா இரண்டாம் கட்ட பரவலால், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை தவிர, மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு, தமிழகம், கர்நாடகாவின் பிற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், நேற்று முதல், வரும், 13 வரை வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மேட்டூரில் இருந்து, மாதேஸ்வரன்மலை கோவிலுக்கு, வேன், கார், இருசக்கர வாகனங்களில் சென்ற பக்தர்களை, பாலாறு வனத்துறை சோதனைச்சாவடியில் முகாமிட்டிருந்த, கர்நாடகா போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும், 13ல் நடக்கவுள்ள பெரிய தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, இன்று, பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.