ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2021 05:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பக்தர்கள் ரத வீதியில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்ப சலனம் அதிகரித்து, வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் கோயில் ரத வீதியில் பக்தர்கள் நடந்து அக்னி கடலில் நீராடி பின் கோயிலுக்குள் செல்வார்கள். தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு ரத வீதியில் கோயில் நிர்வாகம் நிழல் தரும் பந்தல் அமைக்காததால், பக்தர்கள் ரத வீதியில் நடக்க முடியாமல் ஓட்டம் பிடிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தனியாரின் மூன்று சக்கர சைக்கிளில் சவாரி செய்து தங்கும் விடுதிக்கு செல்லுகின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி ரத வீதியில் நிழல் தரும் பந்தல் அமைக்க கோயில் நிர்வாகத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிடவேண்டும்.