கண்ணபுரம் மாரியம்மன், விக்ரம சோழீசுவரர் திருக் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2021 05:04
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம், கண்ணபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் விக்கிரம சோழீஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் பொங்கல் நிகழ்வு நடைபெறாது என திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கண்ணபுரம் மாரியம்மன் கோவிலில் பிரதி ஆண்டு சித்ரா பவுர்ணமி முன்னிட்டு ஏப்ரல் 26 ம் தேதி திங்கள்கிழமை நடைபெற இருந்த தேரோட்டம் நடைபெறாது எனவும் ஏப்ரல் 29 ம் தேதி வியாழக்கிழமை விக்கிரம சோழீஸ்வரர் திருக்கோவிலில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடைபெறாது எனவும் திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்து சமய அறநிலைத்துறை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் தேங்காய், பூ, பழம், கொண்டு வருவதை தவிர்க்கவும் திருவிழா மற்றும் திருவீதி உலா அரசின் நிலையான இயக்க நடைமுறை அமலில் உள்ளதால் திருக்கோவில் பழக்கவழக்கப்படி மற்றும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும். சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அபிஷேக ஆராதனை செய்தபின்பு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தனர்.