குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழா கொடியேற்றம் நடந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா ஏப்., மே மாதங்களில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவுக்கு கொடியேற்றம் கடந்த 9ல் நடந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், காப்பு கட்டு முதல் தேர்திருவிழி உலா வரை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கொடி இறக்கப்பட்டது. மேலும், நித்தியப்படி பூஜைகள், அபிஷேக அலங்காரம் ஆகியவை கோவில் நிர்வாகத்தால் தொடர்ந்து நடத்தப்படுகிறது.