காரைக்குடி:காரைக்குடி அருகே வடகுடி நெல்லியாண்டவர் ஓசைமணி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 8ம் தேதி முதல் கால பூஜையுடன் விழா துவங்கியது. இரண்டு, மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனையும், காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடந்தது. இரவு சுவாமி வீதி உலா நடந்தது.